8910 குடாநாட்டுப் போர் (உத்துரு குரு சட்டன).

ஏ.எம். கருணாரத்தின. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், மருதானை வீதி, 1வது பதிப்பு, 1998. (வெல்லம்பிட்டி: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி).

268 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-20-2485-4.

குடாநாட்டுபோர் தொடர்பான சிங்கள இலக்கியவாதியின் இலக்கியப் படைப்பு இதுவாகும். குருதியாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்துத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை  இனம் மதம் மொழி கடந்த மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் தரிசித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை, சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகப் பணிபுரியும்  ஏ.எம். கருணாரத்தின  பல்வேறு பல்கலைக்கழகப் போராட்டங்களுக்குத் தன் இளம் வயதில் தலைமைதாங்கியவர். துணிச்சல் மிக்க சிங்கள இலக்கியவாதியாக இன்று அறியப்படுபவர் இவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  125018).

ஏனைய பதிவுகள்