எஸ்.ஜெகன். மன்னார்: ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை, நானாட்டான், 1வது பதிப்பு, ஜுலை 2012. (மன்னார்: ஸ்கை அச்சகம்).
viii, 75 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
வாய்மொழி இலக்கியங்கள், கர்ணபரம்பரைக் கதைகள், தொல்பொருள் சான்றுகள், இலக்கிய ஆதாரங்கள் என எதையுமே விட்டுவைக்காமல் அவற்றைப் பயன்படுத்தி இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கடவுள் என்பது யார் என்பதில் தொடங்கி, முதல் உயிரினங்களின் தோற்றம் பற்றிக்கூறி, மன்னார் மாவட்டத்தைப் பற்றிய பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் இந்நூலில் வழங்கியுள்ளார்.