சிதம்பரபத்தினி.ஆனைக்கோட்டை: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).
xvi, 87 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ.
சிறந்ததொரு நிர்வாகியாகவும், ஆக்க இலக்கியகர்த்தாவாகவும் தன்னை இனம்காட்டியவர் சிதம்பரபத்தினி, பத்தினியம்மா, சித்தி, பிரக்ஞா ஆகிய புனைபெயர்களுடன் வலம்வரும் இந்நூலாசிரியர். வலிகாமம் வடக்கை களமாகக் கொண்ட இவ்வாய்வு ஒரு இடப்பெயர்ஆய்வு முயற்சியாகும். வலிகாமம் வடக்கில் மக்கள் கூடுதலாக இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய பௌத்த மதத்தைத் தழுவியிருந்த காரணத்தால் பௌத்தத்தின் செல்வாக்கினை இடப்பெயர்களில் அவதானிக்கலாம் என்று கூறும் இவர், யாழ்ப்பாணத்தில் தொடக்கத்தில் தமிழரான இயக்கர், நாகர் வாழ்ந்தனர் என்றும், தமிழ் பௌத்தம் விஜயனின் இலங்கை வருகைக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் நிலவியதாகவும் வலியுறுத்துகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226013).