8935 ஊரும் வாழ்வும்: தும்பளைக் கிராமம் பற்றிய சமூகவியல் ஆவணம்.

வை.பா.ரகுவரன். பருத்தித்துறை: வை.பா.ரகுவரன், பிராமண வீதி, தும்பளை, 1வது பதிப்பு, மே 2001. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். கொம்பியுட்டர் பிரஸ், வி.எம்.வீதி).

ix, 112 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரான நூலாசிரியர் கலை இலக்கியத்துறையிலும் ஈடுபாடுகொண்டவர். இவரது கவிதைகள், சிறுகதைகள் என்பன அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. தான் வாழும் பருத்தித்துறைக் கிராமமான தும்பளை பற்றிய பிரதேச வரலாற்றினை சுவையாக இங்கு பதிவுசெய்கின்றார். சமூக வரலாற்றுப் பின்னணி, வாழ்க்கையும் சடங்கும், வாழ்க்கை முறை, தொழில் வளம், கல்விப் பாரம்பரியம், விளையாட்டுக்கள், நாடக மரபுகள், கோயிலும் வழிபாடும், மாண்புறு மக்கள் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இந்நூலை இவர் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  155717).

ஏனைய பதிவுகள்

11115 அரியவும் பெரியவும்: பெரியபுராணச் சிந்தனைகள்: 1ம் பாகம்.

மு.கந்தையா. தெல்லிப்பழை: துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, தை 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xvi, 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. சேக்கிழார் 12ம் நூற்றாண்டில் அருளிய பெரியபுராணத்தின் அரிய