8958 இலங்கை: துப்பாக்கிகள் மௌனமான வரலாறு.

என். மருத்துவமணி, மா.இராமசாமி. சென்னை 600039: உழைப்பாளிகள் பதிப்பகம், 22/4, வசந்தம் குடியிருப்பு, மகாகவி பாரதி நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600 014: பிரின்ட் ஸ்பெஷாலிட்டீஸ்).

240 பக்கம், விலை: ரூபா 120.00, அளவு: 21.5×14 சமீ.

முன்னுரை, இலங்கையின் வரலாறு, இலங்கையில் மலையகத் தமிழர்களின் வரலாறு, தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்னடைவும், இலங்கையில் இனப்பூசல்கள், இலங்கையின் தேர்தல்கள், ஜனதா விமுக்தி பெரமுனவின் தோற்றம், இலங்கையில் மார்க்சியம் பரப்பியவர்கள், தோழர் பி.இராமமூர்த்தியின் தொலைநோக்குப் பார்வை, இலங்கையில் சாதி இழிவுக்கு எதிரான போராட்டங்கள், தோழர் சண் என்னும் சண்முகதாசன், அறப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய வரலாறு, இந்திய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டறிக்கை, தமிழக அரசியல் கட்சிகளின் நிலை, நேபாளம் கற்றுத்தரும் பாடம், புத்தனின் போதனையை மதிக்காத இலங்கை அரசு, நசியா பரூக்- சிங்களப் பெண் எழுத்தாளரின் பார்வை, முடிவுரை  ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற சி.புஷ்பராஜாவின் நூலின் சில பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.இவ்வத்தியாயங்களுக்கூடாக  இலங்கையில் சிங்களவர், மலையகத்தவர்கள், மற்றும் மலையகத் தமிழரால் உருவாக்கப்பட்ட இடதுசாரி அமைப்புகள், சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்மக்களின் போராட்டங்கள், ஜே.வீ.பீயின் தோற்றம், ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சிகள், தலித் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள், புலிகளின் இராஜீவ்காந்தி கொலை, முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான இராஜபக்ஷ அரசின் கொடூரமான நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் பேசுகின்றது.

ஏனைய பதிவுகள்

Oklahoma Town Thunder Tv Plan

Content %150 Hoşgeldi̇letter 3750  Tl Bonusnu 150 Free Spi̇n Hedi̇ye Sacred Sipping Traditions: The newest Shoey Doncic’s the second miss which have ten seconds left