7031யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக ஏட்டுச் சுவடிகள் பட்டியல்.

சி.முருகவேள் (பரிசோதித்துத் தொகுத்தவர்). யாழ்ப்பாணம்: நூலகம், யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,  1வது பதிப்பு, மே 1992. (கல்லச்சுப் பிரதி).

(4), 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,  அளவு: 32×19.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலம் தொடக்கம், அவ்வப்போது பல ஓலைச் சுவடிகள் நன்கொடைகளாகவும் இன்னும் வேறு வழிகளிலும் வந்து சேர்ந்திருந்தன. அவற்றைப் பார்வையிட்டு  விஞ்ஞானபூர்வமாக அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு பட்டியலாக வெளியிட்டுள்ளனர். அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச் சுட்டு, பொருட்சுட்டு ஆகிய மூன்று பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் ஒவ்வொரு பிரதான பதிவிலும் ஏட்டின் தலைப்பு, பிரதிப்பாடத் தொடக்கம், பிரதிப்பாட முடிவு, ஓலைகளின் எண்ணிக்கை, அளவும் பிற பௌதிக விபரங்களும், குறிப்புகள் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வேட்டுச் சுவடிகளுள் கிரந்த லிபியில் அமைந்த வடமொழிச்சுவடிகளை ஆராய்ந்து இனங்காண பிரமஸ்ரீ மு.சுந்தரமூர்த்தி அவர்கள் உதவியுள்ளார்.  சி.முருகவேள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றியவர். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 440273).

ஏனைய பதிவுகள்

14100 வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தலம், வெல்லாவெளி, 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி). 150 பக்கம்,

15569 நீர்ப்பறவை.

கவிப்பிரகா (இயற்பெயர்: குணரெத்தினம் தனுஷன்). நெடுந்தீவு: குணரெத்தினம் தனுஷன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (நெடுந்தீவு: பப்பிட்டர் ஸ்டூடியோஸ்). (14), 108 பக்கம், விலை:

12453 – இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்-2007.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்). ix, (3), 44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சிவஸ்ரீ