நாராயண சுவாமிகள். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1958. (தமிழ்நாடு: கலைமகள் பிரஸ், வடக்கன்குவம்).
178 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 18×12.5 சமீ.
இது சுத்த வைதீக வேதியரும், ஸ்ரீ விஷ்ணு வணக்கத் திருவிரதாநூலாசிரியரும், வடமொழி தென்மொழிச் சோதிட நூல்களில் பரிச்சயம்; மிக்கவருமான கடுவைகாவலன் நாராயணசுவாமிகள் இயற்றிய சோதிட நூல். இதன் மூலப்; பதிப்பு 1881இல் கார்த்திகேயப் புலவரால் பதிப்பித்து காரைநகரில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1900இல் வித்துவான் கா.சிவசிதம்பர ஐயரால் காரைநகரில் வெளியிடப்பட்டது. அரசர் வினைப்படலம், உதயாரூடக்கவிப்புப் படலம், உற்பாதப் படலம், எச்சவினைப்படலம், ஏர்மங்கலப்படலம், கடிமணப்படலம், கர்ப்பாதானப்படலம், காலசக்கரப்படலம், கோசாரப்படலம், சந்திரகெதிப் படலம், சட்டுவர்க்கப்படலம், சாதகப்படலம், தீவினைப்படலம், தெருட்சிப்படலம், தெய்வப்பிரதிட்டைப்படலம், தெய்வவழிப்படலம், நட்பட்சியுச்சபகைநீசபடலம், நல்வினைப்படலம், பஞ்சாங்கப் படலம், மரபிற்படலம், மகாதிசைப்படலம், மகளிர்வினைப்படலம், மைந்தர்வினைப்படலம், யாத்திரைப்படலம் ஆகிய படலத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்113500).