கமால் அலி அல் முன்தஸர் (அரபு மூலம்), மௌலவி எம்.ஐ.அப்துர்ரஸ்ஸாக் (தமிழாக்கம்), A.R.M.மஹ்ரூப் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: உலக இஸ்லாமிய அழைப்பு இயக்க கொழும்புக் கிளை, இல. 4, கேம்பிரிட்ஜ் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (தெகிவளை: Crescent Publications, 156, Hospital Road)
68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.
தஃலீமுஸ்ஸலாத் – (தொழுகை விபரம்) என்ற தலைப்பில் அரபுமொழியில் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம் இதுவாகும். இஸ்லாமிய மத வழக்கப்படி தொழுகைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அடிப்படை விதிமுறைகளை இந்நூல் விளக்குகின்றது. முஸ்லிமின் நம்பிக்கை, இஸ்லாம் என்றால் என்ன, இஸ்லாத்தில் நுழைதல், முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் ருக்ன்கள், வுழுச் செய்தல், அத்தயம்மும், தொழுகை, தொழும் முறை, சிறிய சூறாக்கள் சில ஆகிய பத்துத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 617981).