ரஞ்சினி சாம்பசிவம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: நூற்றாண்டு மலர்க்குழு, உரும்பிராய் இந்துக் கல்லூரி, உரும்பிராய், 1வது பதிப்பு, சித்திரை 2011. (கொழும்பு: Andra Digital Images)
lxx, 288 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ.
03.04.2011 அன்று இடம்பெற்ற மேற்படி கல்லூரியின் நூற்றாண்டுவிழா நினைவாக வெளியிடப்பட்ட சிறப்புமலர் இதுவாகும். மேற்படி மலர் வெளியீட்டுக்குழுவின் தலைவராக கல்லூரி முதல்வர் அப்பாத்துரை ஈஸ்வரநாதன் இயங்கியுள்ளார். மலர் வெளியீட்டுக்குழு உறுப்பினர்களாக கே.உருத்திரகுமாரன், திருமதி எஸ்.சிறீதரன், திருமதி வி.சண்முகசுந்தரமூர்த்தி, திருமதி எம்.சிவசிதம்பரலிங்கம், எம்.ஆர்.நரேந்திரா, கே.திருமாலழகன், கே.செல்வச்சந்திரன், எஸ்.சிவகுமாரன் ஆகியோர் இயங்கியுள்ளனர். மேற்படி பாடசாலையின் வரலாறுகூறும் இம்மலரில் வாழ்த்துரைகளுடன், பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் அறிஞர்களினதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.