சி.நவநீதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.நவநீதன், மகப்பேற்று பெண்நோயியில் நிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, தை 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).
100 பக்கம், 92 விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-98894-0-0.
யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண் நோயியல் நிபுணரும், யாழ். மருத்துவபீடத்தின் பகுதிநேர விரிவுரையாளருமான கலாநிதி நவநீதன் இந்நூலாசிரியர். கர்ப்பிணிப் பெண்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் சந்தேகங்களுக்கும் மருத்துவரீதியான பதிலை இந்நூல் வழங்குகின்றது. கர்ப்பகாலப் பராமரிப்பை மும்மூன்று மாதங்களாகப் பிரித்து அவ்வக்காலகட்டத் தேவைகள், சந்தேகங்கள் பற்றி வாசகருடன் இந்நூல் உரையாடுகின்றது. ஆரம்ப கர்ப்பகாலம், கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஆரம்பகால கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், பிரசவகால உடற்பராமரிப்பும் உடற்பயிற்சியும், நாள் பிந்திய கர்ப்பம், சத்திரசிகிச்சை மூலம் மகப்பேறு, ஆயுத பிரசவங்கள், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள், தாய்ப்பாலூட்டல், மகப்பேற்றின் பின் குடும்பத்திட்டம் உள்ளிட்ட 20 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக, திருமணமாகி எவ்வளவு நாளில் கருத்தரிக்கும், குங்குமப்பூ சாப்பிடலாமா, தவிர்க்க வேண்டிய உணவுகள், விடயங்கள் எவை, பத்தியம், குழை அவித்துக் குளித்தல் ஆகியவற்றின் பயன் என்ன என்பனபோன்ற கேள்விகளுக்கு இந்நூல் தெளிவான பதிலை வழங்குகின்றது. இத்தகைய பிராந்திய அணுகுமுறையானது இந்த நூலை ஈழத்து வாசகரிடம் நம்பிக்கையுடன் கொண்டுசெல்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40015).