வாகரைவாணன். (இயற்பெயர்: சந்தியாப் பிள்ளை அரியரத்தினம்). மட்டக்களப்பு: வாகரைவாணன், ஆரணியகம், நாவற்குடா, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (மட்டக்களப்பு: ஜேஸ்கொம் ஓப்செற் அச்சகம், இல.1, யேசு சபை வீதி).
34 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ.
64 பொருள் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் கொண்ட சிறுவர் இலக்கியம் இது. ஆசிரியரின் நான்காவது குழந்தை இலக்கிய நூல். இவரது முதலாவது நூலான பாலர் தமிழ்ப் பாட்டு 1994இல் யாழ்ப்பாணம் இலக்கியப் பேரவையின் முதற் பரிசையும், சின்னச் சின்னப் பூக்கள் என்ற இரண்டாவது நூல் 1998இல் இலங்கை அரசின் சாஹித்திய மண்டலப் பரிசையும் பெற்றுத்தந்;தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20697).