உ.நிசார். மாவனல்ல: எச்.எல்.எம்.நிசார், 70/3 புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2007. (மாவனல்ல: எம்.ஜே.எம். பதிப்பகம், 119 பிரதான வீதி).
vi, 20 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21×14 சமீ., ISBN: 955-50064-1-5.
ஆரம்பக் கல்வி ஆசிரியராக இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றும் நிசார் பல சிறுவர் நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார். இந்நூல் இவரது சிறுவர் பாடல்களின் தொகுப்பு. ஆரம்ப வகுப்பு பாடவிதானத்தில்; விதந்துரைக்கப்பட்ட விடயத் தலைப்புகளை கருத்திற்கொண்டு சிறார்களின் அறிவாற்றல், அவர்களது சுவைத்திறன், ரசனைக்கு ஏற்ப கவிதைகளை யாத்துள்ளார். இயற்கை, பறவைகள், விலங்குகள், குடும்பம், நற்பண்புகள், விஞ்ஞானம் என்பவற்றைத் தன் பாடுபொருளாகக் கொண்டுள்ளார். சிறுவர்களுக்கேற்ற சந்தக் கவிதைகளாக இவை உள்ளன. மலரும் மொட்டுக்கள், வா வெண்புறா, கல்வி கற்போம், கல்யாணம், குட்டி முயலே, காந்தி தாத்தா, மரங்களை நடுவோம், எங்கள் குடும்பம், புகைவண்டி, தம்பிப் பாப்பா, மரங்கள், ஏற்றமிகு இயற்கை, இரவு சிரித்தது, உழைத்து உண்ணப்பழகு, புவியீர்ப்பு விசை, இன்று போய் நாளை வா, நியாயம் எங்கே, பந்தடிப்போம் ஆகிய 18 தலைப்புகளிலான சிறுவர் பாடல்கள் இவை.