7473 76 கவிதைகள்: திருமலை மாணவர்களது கவிதைகள்.

திருக்கோணமலை மாணவர்கள் (மூலம்), தில்லைநாதன் பவித்ரன் (இதழாசிரியர்). திருக்கோணமலை: அகில இலங்கை இளங்கோ கழகம், 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ், 58 வித்தியாலயம் வீதி).

52 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5சமீ.

திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களிடையே கவிதா புலமையை வளர்த்தெடுக்கும் வகையில் அவர்களது கவிதைகளைப் பிரசுரிக்கும் தொடர்முயற்சியின் முதலாவது தடம் இந்நூலின் வரவுடன் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 76 மாணவர்களின் கன்னிக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பிரசுர முயற்சியின் பின்னணியில் துணை ஆசிரியர்களாக த.தனுஸ்கர், நா.சதீஸ்கரன், ந.சோபன், சி.சுரேந்திரன் ஆகிய நால்வரும் பணியாற்றியுள்ளனர். கவிஞர் பெரிய ஐங்கரனின் வழிகாட்டலுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுப்பு, திருக்கோணமலையிலுள்ள பாடசாலை மாணவர்களின் கவிதைகளை உள்ளடக்கியது. இளம் மாணவரிடையே மொழி அறிவு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று, கலாசாரம் என்பன பெருகவேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கவிதைநூல் வெளிவந்துள்ளது. மாணவர்களின் உள்ளக்கிடக்கைகளை உணர்ச்சிமிக்க சொல்லோவியங்களாக மாற்றிவழங்கியுள்ளனர். உவர்மலை விவேகானந்த வித்தியாலயம், புனித சூசையப்பர் கல்லூரி, கோணேஸ்வரா வித்தியாலயம், சண்முக இந்து மகளிர் வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி, மெதடிஸ்த வித்தியாலயம், ஸாஹிராக் கல்லூரி, விக்னேஸ்வரா வித்தியாலயம், விபுலாநந்தாக் கல்லூரி, பிரான்சிஸ் சவேரியார் கல்லூரி, செல்வநாயகபுரம் இந்து வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், ஆகியவற்றைச்சேர்ந்த 76 மாணவர்களின் கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்