7475 என்ன செப்பங்கா நீ.

சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்).நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 60005: மணி ஓப்செட்).

142 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89359-28-2.

தன்னைச் சுற்றியுள்ள, தான் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தினைக் கேள்விக்குறியாக்குவதுடன்  ஒவ்வொரு அம்சங்களுடனும் தொடர்பு கொள்ளும்தன்மை ஒருவகையில் முக்கியமான படிமுறைத்தன்மையாகும். இந்தத் தொடர்பும் அனுபவமும்  சிறந்த கவிதைகளாகப்  பிரசவிக்க சோலைக்கிளிக்கு நல்ல வாய்ப்பளிக்கின்றது. வீட்டில் பல்லிகளையும், ஆட்டுக்குட்டியையும், நிலவையும், வெள்ளிகளையும், நீரையும், சூரியனின் நாக்கையும் தொடர்பு படுத்தவும் இந்தப் பிரபஞ்சத்தின் இதயத்தையும் ஒன்றிரண்டு தரம் தொட்டுப்பார்க்கவும் அவரால் முடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் கல்முனையைப் பிறப்பிடமாகக்கொண்ட சோலைக்கிளி எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். இருப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர்.  சிறந்த கவிதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்திய விருதினை 1996இல் பாம்பு நரம்பு மனிதன் தொகுதிக்காகவும், 1997இல் பனியில் மொழி எழுதி தொகுதிக்காகவும் பெற்றவர். 1991இல் இவரது காகம் கலைத்த கனவு சுதந்திர இலக்கிய விழாவில் சிறந்த தொகுதிக்கான விருதினைப் பெற்றது.  1988இல் இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருதை எட்டாவது நரகம் தொகுதிக்காகப் பெற்றவர். 2005இல் ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருதையும் பெற்றுள்ளார். இது சோலைக்கிளியின் ஏழாவது கவிதைத் தொகுதி.

ஏனைய பதிவுகள்