அருணா சுந்தரராசன். தஞ்சாவூர் 613007: அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, ஜுன் 2007. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.
ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும், தான் வேரோடிய ஈழத்தமிழ்மண்ணை மறவாது கவிதைபாடிவரும் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் அருணா சுந்தரராசனும் ஒருவர். கடவுளைக் கொன்றுவிடு இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. மூடநம்பிக்கை என்னும் விஷம் சமுதாயத்தில் எந்த வடிவில் பரவியிருந்தாலும் அதனை அழித்து நிர்மூலமாக்குவதில் தனது கவிதைகள் துணைநிற்கும் என்ற பிரகடனத்தோடு எழுத்துத்துறையில் நுழைந்த இவரது கவிதைகளும் இவரது நோக்கத்தை அடைய ஆயுதமாகியிருக்கின்றன. சமூகத்துக்கு அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ள இவரது கவிதைகளில் சிந்தனை ஆழமும் புரட்சி வேகமும் கவிந்து காணப்படுகின்றன. தமிழீழ மக்களிடமும் போராளிகளிடமும் இவர் அன்பும் போற்றுதல் உணர்வும் கொண்டு பல கவிதைகளை இயற்றியுள்ளார். அவற்றில் இவரது உள்ளத்து உணர்ச்சிகள் நெருப்பாகக் கனலுகின்றன.