வ.ந.கிரிதரன். கனடா: மங்கை பதிப்பகம், 38, Thorncliff Park Dr – 510, Toronto, Ontario, M4H 1J9, 1வது பதிப்பு, தை 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: கனேடிய டொலர் 2.00, அளவு: 18×12.5 சமீ. இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தவை. எஞ்சியவை குரல் கையெழுத்துச் சஞ்சிகையிலும், வீரகேசரி, தினகரன், நுட்பம் ஆகியவற்றிலும் வெளியானவை. இது 1987இல் வெளிவந்த குறுநாவல் தொகுதியான “மண்ணின் குரல்” என்ற நூலை அடுத்து ஆசிரியரின் இரண்டாவது நூலும் முதலாவது கவிதைத் தொகுதியுமாகும். சமகால அரசியலோடு, அகதிவாழ்வின் அவலத்தைப் பதிவுசெய்யும் பாடல்களையும், மானிட விடுதலை பற்றிய தொலைநோக்குடனான பாடல்களையும் இத்தொகுப்பு அகப்படுத்திக் கொண்டுள்ளது. கவிதைகளின் இறுதியில் அக்கவிதைகளின் பின்னணி பற்றிய புரிதலை வழங்கும் சிறு குறிப்புகளும் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. விடிவெள்ளி, இயற்கைத் தாயே, தாஜ்மஹால், சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம், எங்கு போனார் என்னவர்?, விழி-எழு-உடைத்தெறி, நியதியை உணர்ந்தவர்கள், எழுக அதிமானுடா, தை பிறக்க, விளங்கிச் செல்வோம், பாரதி என் தலைவன், மும்மூர்த்திகள், எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு, தமிழா, எதிர்பார்ப்பு, ஆசை, எழுக மானிடா, ஐன்ஸ்டைன், என்ன நியாயம், அழிவு, அ.ந.கந்தசாமி, மார்க்ஸ், மேப்பிள் மண்ணின் மைந்தர்களே i-iii, துருவத்தை நோக்கி, காடு, பெண்கள், இழந்துபோன பொழுதுகள், பிறப்பின் பயன் ஆகிய 30 கவியாக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 071518).
Best Ports Sites Us 2024 Play Online slots for real Currency
Articles Goldfish mobile slot play for real money | Just what is highly recommended when choosing an internet local casino the real deal currency? Age