14586 என் இதயம் பேசுகிறது.

ஏ.சீ.எம்.இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0932-13-9. ஆசிரியரின் ஐம்பது வருடகால கவிதைகளின் தொகுதி. இத்தொகுதியிலுள்ள கவிஞர் A.C.M. இப்றாஹீம் அவர்களின் கவிதைகள் அனைத்தும் மரபின் கடந்தகால, நிகழ்கால வர்ணனைகள் ததும்பும் தெளிவுமிக்க சொற்களின் கலவைகள் எனலாம். இவர் தனக்கானதொரு பாதையில் தன் கவிதைகளை வளர்த்து மனதுக்கு மிகவும் இதமளிக்கும் வகையில் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை எங்கெங்கோ இருந்து தேடிப்பிடித்து அவற்றை மரபின் சுவையுடன் கவிதைகளாக இங்கு தன் இதயத்தின் வாயிலாகப் பேசவைத்திருக்கிறார். ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகவும், பேனா பதிப்பகத்தின் 17ஆவது வெளியீடாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது. ஏ.சீ.எம். இப்றாஹீம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர சேவையில் இணைந்து, சீனக்குடியரசின் தலைநகரிலும், தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சேவையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்