கு.றஜீபன். யாழ்ப்பாணம்: சிதம்பரப்பிள்ளை சின்னத்தம்பி நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்ட்ஸ், 717, காங்கேசன்துறை வீதி). (4), 24 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×10.5 சமீ. வாழ்க்கையில் பெற்ற அனுபவ விதைகளை சிந்தனைத் தோட்டத்தில் பதியம்வைத்து முளைத்த நாற்றுக்களே இக்கவிதைகள். வாழ்க்கை என்னும் தத்துவ நூலின் ஓரிரு வரிகள் இவை. வாழ்க்கை என்னும் நூலகத்தில் வாலிபம் என்னும் பிரிவுக்குள் காகிதம் நனையக் கரைந்து கரைந்து இக்கவிஞன் ஈரவரிகளால் தன் கவிதைகளைப் பிரசவித்துள்ளான். அனுபவ முத்திரைகளை அன்பாலும் கண்ணீராலும் பெற முயலும் ஒரு குழந்தையின் மழலைப் பேச்சுக்களாக இவை உதிர்ந்துள்ளன. அன்பின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ண அலைகள் இங்கு ஒரு நதியின் தேடலாக வடிவம்கொண்டுள்ளன. அமரர் சிதம்பரப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 21ஆம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு அவரின் ஞாபகார்த்தமாக இக்கவிதைத் தொகுதி தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.