கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424 A , காங்கேசன்துறை வீதி). (4), 132 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISDN: 1391-9156. இவ்விதழில், முன்னுரை: ஏ. ஜே. கனகரட்ணாவின் நினைவுகளுக்குச் சமர்ப்பணம் (பனுவல் ஆசிரியர் குழு), பண்பாடு என்ற கருத்தாக்கம் (தே. லூர்து), தொறுப்புசல்-வீரயுக மரபு: மேட்டுநில தமிழகத்தில் ஆநிரை-சார் சமூக உருவாக்கம் (க. குணசேகரன்), பொதிசெய்யப்பட்ட வினோதங்களாக தொடர்மாடி மனைகள்: இடமின்மைத் தன்மையின் அரசியலும், சுவையின் நியமப் படுத்தலும் (சசங்க பெரெரா), இருபால் ஓருடல்: அர்த்தநாரீஸ்வரர் அகழ்வாய்வுக் குறிப்புக்கள் (பாக்கியநாதன் அகிலன்), பனுவல் நூல் திறனாய்வு: கே.என்.ஓ.தர்மதாசவின் தேசப்பற்று-சமூக அறிவுசார் திறனாய்வு என்ற நூல் (சசங்க பெரேரா-மூலம், சாமிநாதன் விமல்-தமிழாக்கம்) ஆகிய ஆக்கங்களை இவ்விதழ் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59866).