கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). iv, 133 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISDN: 1391-9156.இவ்விதழில், நுழைவாயில் (பனுவல் ஆசிரியர் குழு), கிளத்தலும் நிகழ்த்தலும்: திருவாய்மொழியிற் பக்தி நிகழ்த்தல் (ந.கோவிந்தராஜன்), பிறரை உற்றுப்பார்த்தல்: லயனல் வென்ற் மற்றும் டேவிட் பெயின்ரரின் ஓவியங்களில் ஆண்தேகம் (தா.சனாதனன்), ஜா-எல பிரதேசத்தில் ஏற்பட்ட தமிழ் இந்து அடையாள மாற்றத்தில் எவான்ஜலியன் சமயச் செயற்றிட்டத்தின் தாக்கம் (அனுஷ்கா ஹகந்தகம), பொசன்: பின்-காலனிய இலங்கையில் பௌத்த யாத்திரையின் அரசியல் (ஜொனத்தன் எஸ்.வால்டர்ஸ்), பனுவல் நூல் திறனாய்வு: திராவிடச் சான்று-எல்லிசும் திராவிட மொழிகளும் (கி.நாச்சிமுத்து), யுடினைiபெ டில ளுசi டுயமெய: ழுn Pநயஉந யனெ Pடயஉந யனெ Pழளவ உழடழnயைடவைல-தேசப்பற்று: சமூக அறிவுசார் திறனாய்வு (காயத்திரிதேவி) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் கலைற்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59880).