கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). ii, 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ. இலங்கையில் பெருந்தோட்டத்துறை வளர்ச்சியில் பெண்கள் பெரும் பங்காற்றி உள்ளார்கள். 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புலம்பெயர்ந்த ஊழிய படையில் இவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தனர். தொடர்ந்துவந்த பிற்காலத்திலும் பெருந்தோட்டத்துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டோரில் அரைப் பங்கிற்கும் மேலாகவே பெண்கள் இருந்தனர். இவர்களால் செய்யப்பட்ட வேலை கடுமையானதாகவும், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியதாகவும் நேரத்தை உறிஞ்சுவதாகவும் அமைந்திருந்தது. பெருந்தோட்ட உற்பத்தி வரலாற்றில் அவர்களுடைய ஈடுபாடு தகுந்த அளவில் அங்கீகரிக்கப்படவோ கணக்கெடுக்கப்படவோ இல்லை. இந்தியாவிலிருந்து பெருந்தோட்டத்தில் வேலைசெய்ய வந்து, பின்னர் திரும்பிச் சென்றோர் தொகையின் புள்ளிவிபரங்கள் சில இவ்வாய்வாளருக்குக் கிடைத்துள்ளன. பெருந்தோட்டத்துறையின் ஊழியப் படையில் அவர்களும் அங்கம் வகித்ததாக ஆங்காங்கே குறிப்புகள் கூறுகின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் மற்றும் மனக் கொந்தளிப்புகளும், அவற்றை அவர்கள் எதிர்நோக்கிப் போராடி இறந்தது பற்றிய விபரங்களும், சொற்ப அளவிலேயே கவனத்திற்கெடுக்கப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இவர்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவங்கள் பற்றி மீளாய்வு செய்வதே இத்தனிவரைபின் நோக்கமாகும்.