மாற்றுக் கல்வி நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கல்வி நிலையம், சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெரஸ், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2006, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (ஹோமகம: கருணாரத்ன அன்ட் சன்ஸ் லிமிட்டெட், 67, கைத்தொழில் பேட்டை, கட்டுவான வீதி). iv, 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISDN: 955-9102-56-7. சமாதானக் கல்வி வெளியீட்டுத் தொடரில் முதலாவது நூலாக இது வெளியிடப் பட்டுள்ளது. அரசியல்ரீதியாக மாற்றமுறும் பின்னணியினுள் நாட்டின் அரசியல் விவாதத்தை சனநாயக ரீதியில் வலுவூட்டுவதற்குப் பங்களிப்புச் செய்யும் பொருட்டு இக் கல்வி வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. சமஷ்டி முறை மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய இரண்டு விடயங்களும் இச்சிறு நூலின் தொனிப்பொருள்களாகும். இலங்கைக்கு எவ்வாறான சமஷ்டிமுறை பொருத்தமானது என்பதை இலங்கையின் அரசியல் சக்திகளும் பொதுமக்களுமே தீர்மானித்தல் வேண்டும். அவ்வாறானதொரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு இந்நூல் வழிகாட்டுகின்றது. சமஷ்டி முறை ஓர் அறிமுகம், சமஷ்டி முறைக்கான வரைவிலக்கணம், சமஷ்டிஆட்சி முறையின் பண்புகள், சமஷ்டி முறையும் கூட்டாட்சி முறையும், சமஷ்டி முறையிலுள்ள சிறப்பியல்பு வாய்ந்த பண்புகள், சமஷ்டி முறை உருவாவதற்கான வழிகள், சமஷ்டி முறைகளில் அரச அலகுகளின் சுதந்திரமும் உரிமைகளும், அலகுகளின் சுதந்திரமும் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் வெளிநாட்டுத் தொடர்புகளும், சட்டங்களை ஆக்குகின்ற அதிகாரம் தொடர்பான சிக்கல், நிறைவேற்றதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளல், சமஷ்டி முறையும் இரட்டைச் சட்டசபையும், நீதிமன்ற அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளல், பொருளாதாரத் தொடர்புகள், ஒத்துழைப்புரீதியிலான சமஷ்டிமுறை, இலங்கைக்குப் பொருத்தமான சமஷ்டி முறை யாது?, தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையும் இலங்கையின் இனப்பிரச்சினையும், சுயநிர்ணய உரிமையும் தேசிய இனங்களும், லிபரல் எண்ணக்கரு, சுயநிர்ணய உரிமையும் சோஷ லிசவாதிகளும், சுயநிர்ணய உரிமையும் சர்வதேசச் சட்டமும், சர்வதேசச் சட்டமும் பிரிந்துசெல்லும் உரிமையும், கிழக்கு திமோரில் நடந்தது என்ன?, உள்ளக சயநிர்ணயமும் சர்வதேச சட்டமும், சுயநிர்ணயமும் மக்கள் உரிமையும் என இன்னோரன்ன விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39484).