அ.சிவராசா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூல் அரசறிவியலின் இயல்பும் அணுகுமுறைகளும், அரசு, மாக்கியவல்லி கண்ட அரசு, அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள், இறைமை, அதிகாரங்களை வேறாக்கும் கோட்பாடு, ஒற்றையாட்சியும் சமஷ்டியாட்சியும், சட்டம், உரிமைகள், சமத்துவம், சுதந்திரம், சொத்துடைமை, பொதுசன அபிப்பிராயம், அரசியற் கட்சிகள், அமுக்கக் குழுக்கள், சட்டசபை, நிர்வாகத்துறை, நீதித்துறை, ஜனாதிபதி ஆட்சிமுறையும் மந்திரிசபை ஆட்சிமுறையும், பாஸிஸம், அராஜரீகம், சனநாயகம், தாராண்மைவாதம், கற்பனா சோசலிசம், பு.று.கு.ஹெகல், மார்க்ஸ்வாதம், சிண்டிக்கலிசம், தொழிற்சங்கப் பொதுவாயம் அல்லது தொழிற் கூட்டுமுறை (கில்ட் சோசலிசம்), பேபியன் பொதுநலவாதம், லெனின்வாதம் ஆகிய பாடப் பரப்புகளை விளக்குகின்றது. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசறிவியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31033).