14273 இலங்கைப் பாராளுமன்றில் நீதியின் குரல்.

சொலமன் சூ.சிறில் (மூலம்), துரை ஆரோக்கியதாசன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நூல்வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (யாழ்ப்பாணம்: அன்னை பதிப்பகம், பிரதான வீதி). ஒ, 125 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றிய சொலமன் சூசைப்பிள்ளை சிறில் அவர்கள் 2008 மார்ச் மாதம் தொடக்கம் 2010 ஏப்ரல் மாதம் வரை இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய இருபதுக்கும் மேற்பட்ட உரைகள், அறிக்கைகளாக அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்திருந்தன. இவை அனைத்தையும் தொகுத்து இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. அவரது உரைகள் தமிழரின் தேசிய வாழ்வையும் வரலாற்றையும் மையம் கொண்டு கொடூர அனுபவங்களையும் அதே வேளை சமாதானம், அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகள், விவசாயம், மீன்பிடி, கல்வி, மருத்துவம், சூழல், கூட்டுறவு போன்ற அனைத்துத் துறைகளையும் தொட்டு ஆதாரங்கள், அறிவியல்சார் நுட்பமான தரவு என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்வுரைகளஅமைகின்றன. நூல் வெளியீட்டுக் குழுவில் அருட்கலாநிதி அ.பி.சே.ஜெயசேகரம், அ.பீற்றர் யேசுதாசன் (கனடா), துரை ஆரோக்கியதாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49432).

ஏனைய பதிவுகள்