ஜயதேவ உயன்கொட (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு: க.சண்முகலிங்கம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம் அவர்களின் சேவையினைப் பாராட்டும் முகமாக வுhந Pழடவைiஉயட நுஉழழெல ழக நுnஎசைழnஅநவெ யனெ னுநஎநடழிஅநவெ in வாந புடழடியடளைநன றழசடனநஒpடழசiபெ கசழவெநைசள என்னும் நூல் கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் 2012இல் வெளியிடப்பட்டது. அந்நூலில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரை ‘பிரவாதம்” பருவ இதழின் மே-செப்டெம்பர் 2012 (எண் 9-10) இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் தனி நூல் வடிவமே இது. இலங்கையின் பின் காலனித்துவ அரசு தனது ஜனநாயக வடிவத்தை நெகிழ்ச்சியுடையதாக்கி அதனுள்ளே சர்வாதிகார நடைமுறைகளையும் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த அரசு சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து ஜனநாயகத்தை தன்னுடன் வைத்துக்கொண்டது. அதனை முற்றாகத் தூக்கி வீசிவிடவில்லை. ஜனநாயகத்தின் இத்தகைய நெகிழ்வுத் தன்மை காரணமாக இலங்கையில் சர்வாதிகாரம் ஜனநாயகத்தோடு இணைந்து கொண்டது. ஜனநாயகத்துடன் சமரசம் செய்துகொண்ட சர்வாதிகார அரசே இலங்கையில் இன்ற நிலைபெற்றுள்ளது என்று நூலாசிரியர் முடிவுசெய்கின்றார். மேலும், இலங்கையில் ஜனநாயகத்தை மீளவும் உயிர்ப்பிக்கக்கூடிய அமைப்பியல் மாற்றங்களைச் செய்வதை சர்வாதிகார அரசு அனுமதிக்கமாட்டாது என்றும் குறிப்பிடுகின்றார்.
Top Online Casino Payment Options For Usa Players In 2024
Content Are There Fees For Depositing At Pay By Phone Online Casinos? – Club World casino Why Are 5 Minimum Deposit Online Casinos So Popular?