ஆர்.பிரேமதாச (மூலம்), கிறிஸ்டி குறே (தொகுப்பாசிரியர்). கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 65 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் மாண்புமிகு பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் 29.01.1981- 01.02.1981 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது ஆற்றிய உரைகளின் தொகுப்பு. அறிக்கைகளை பொ.இராசதுரை, செல்லப்பா நடராசா ஆகியோரும், மொழிபெயர்ப்பினை நா.சுப்பிரமணியன், செல்லையா குமாரசுவாமி, எம்.கே.இராகுலன் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28875).