சித்ரா றஞ்சன் த சில்வா (விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xx, 433 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×21 சமீ. இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சித்ரா றஞ்சன் த சில்வா, கலாநிதி அம்ரித் ரோஹான் பெரேரா ஆகியோரும், பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாத்தற கமகே சிறிபால பளிஹக்காற, திருமதி மனோகரி இராமநாதன், மக்ஸ்வல் பராக்கிரம பரணகம, முஹம்மட் தவுபீக் முகமட் பாபீக் ஆகியோரும் பணியாற்றினர். இவ்வறிக்கை 2002 பெப்ரவரி 21ஆம் நாளுக்கும் 2009 மே 19ஆம் நாளுக்குமிடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய சம்பவங்களை விசாரித்து அறிக்கையிடுகின்றது. அறிமுகம் மற்றும் செயல்முறைமையியல், போர் நிறுத்த உடன்படிக்கை, பாதுகாப்புப் படைகளினது நடவடிக்கைகளின் மீதான பொது நோக்கு, மனிதாபிமான சட்டப் பிரச்சினைகள், மனித உரிமைகள், காணிப் பிரச்சினைகள்: மீள்வருகை மற்றும் மீள்குடியேற்றம், மீளளிப்புஃநட்ட ஈட்டு நிவாரணம், நல்லிணக்கம், முக்கியமான அவதானிப்புகள் மற்றும் விதந்துரைப்புக்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54442).