14277 குடிமைச் சமூகத்தை வலுவூட்டல். A.B.M.இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 168 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×10.5 சமீ., ISDN: 978-955-0697-08-3. காத்தான்குடியில் 2011 ஏப்ரல் 23 அன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சிவில் சமூகத்தை வலுவூட்டல்-என்ற தொனிப்பொருளிலான அரசியல் உரையாடலை யொட்டி வெளியாகியுள்ள நூல். ஜனநாயகமும் சிவில் சமூகமும், இலங்கையில் கட்சி அரசியலும் அனுபவமும், நிலையான அபிவிருத்தியும் அரசியலும், அரசியல் இஸ்லாம், சமூக வலைத்தளங்கள் ஊடாக சிவில் சமூகத்தை வலுவூட்டல் (புதிய மத்திய கிழக்கின் எழுச்சியை மையப்படுத்திய உரையாடல்) போன்ற தலைப்புக்களை ஒட்டி எழுந்த வாதவிவாதங்களும் அதற்குப் பின்னரான எதிர்வினைகளும் இதில் பதிவாகியுள்ளன. எவ்வளவு காத்திரமான புலமைசார்உரையாடலுக்குள்ளும் பொதுப்புத்தி சார்ந்த சமூக மனநிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் இவ்வுரையாடல் உதவிகரமாய் அமைகிறது.

ஏனைய பதிவுகள்