14281 இந்திய வம்சாவளி மக்கள் 94600 பேருக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்ட வரைவுக்கு ஆதரவாக நான் ஏன் வாக்களித்தேன்?

சரத் முத்தெட்டுவேகம (மூலம்), எல்.பீ.வணிகசேகர (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஊடகத்துறைச் செயலாளர், அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 10: சமயவர்த்தன அச்சகம்). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. 1986ஆம் ஆண்டு 94600 இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட வரைவு பாராளுமன்றத்தின் முன் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் தோழர் சரத் முத்தெட்டுவேகம அவர்கள் இனவாத சந்தர்ப்பவாதிகளாலும், பிற்போக்குச் சந்தர்ப்பவாதிகளாலும் மூடி மறைக்கப்பட்டிருந்த திரையைக் கிழித்தெறியும் வகையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தோட்டத் தொழிலாளர்களினது உண்மையான வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் மிக்க ஒரு உரையாக அமைந்திருந்தது. இந்நாட்டு இனவாதப் பிரச்சினையோடு தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களினது பிரச்சினைகளும் தற்போது ஒன்றாகப் பின்னப்பட்டு இருப்பதால் அவர்களது சமுதாய வரலாற்றைப் புரிந்துகொள்வது காலத்தின் தேவையாகும் என்ற நம்பிக்கையில் இச்சிறு நூலை அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்