இலங்கை மன்றம். கொழும்பு 7: இலங்கை மன்றம், இல.27, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: திஸர அச்சகம், 129, துட்டுகெமுனு வீதி). xxx, 454 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.,ISDN: 955-9056-02-6. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரைகள் மீதான கருத்துரைகள் ஆகியவற்றைப் பிரதான உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்நூலின் பின்னிணைப்புகளாக, பௌத்தம், இந்து சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயப் பாரம்பரியங்களுக்குமான முகவுரை, சர்வதேசப் பிரகடனம்- அதன் வரலாறும் அந்தஸ்தும், மனித உரிமைகள் பற்றிய கல்வி, பாளி நூல்களுக்கான குறுக்கங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17437).