14290 தகவல் அறியும் உரிமை: ஒரு வழிகாட்டி.

கிஹான் குணதிலக்க. கொழும்பு 5: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், 96, கிருள வீதி, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).91 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955- 1734-07-7. யுனெஸ்கோவின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், தகவல் அறியும் உரிமை என்றால் என்ன, இலங்கையின் சட்டக் கட்டமைப்பு, சர்வதேச தரங்கள், பொதுமக்களைப் பொறுத்தவரை தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவம், பத்திரிகையாளர்களுக்குத் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவம், தகவல் அறியும் உரிமைக்கான பிரச்சாரம், எதிர்காலத் திட்டம் ஆகிய அத்தியாயங்களின் கீழ் எழுதப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமையானது, மக்களின் இறைமையின் மேல் நிறுவப்பட்ட எந்த நவீன சனநாயகத்திலும் ஒரு மையப்பொருளாக விளங்குகின்றது. மக்கள் தமது அதிகாரத்தை தமது பிரதி நிதிகளின் ஊடாக, திறமையுடன் உபயோகிக்கமுடியும். அதற்கு ஆட்சிமுறையானது பொறுப்புச்சொல்லக்கூடியதாகவும், வெளிப்படையாகவும் இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஒரு முக்கியமான பொது விவாதம் தகவல் வழங்கும் உரிமை விடயத்தில் தோன்றியுள்ளது. இவ்வழிகாட்டியின் நோக்கம் என்னவென்றால் இலங்கையின் தகவல் அறியும் உரிமையின் பிரச்சாரத்திற்காக ஊடக சமூகத்தின் உள்ளேயும் சிவில் சமூக நிறுவனங்களின் உள்ளேயும் இருக்கும் பரிந்து பேசுபவர்களுக்கு தகவல் அறியும் உரிமை பற்றிய விழிப்புணர்வினை உருவாக்குவதும் தயார் செய்வதும் ஒரு உந்துதலை அளிப்பது மாகும். இவ்வழிகாட்டி எதிர்கால உரையாடல்களுக்கு ஏற்ற ஒரு ஆதார ஸ்தானமாகவும் இதற்கு பரிந்து பேசுவதற்கு ஒரு கருவியாகவும் பணியாற்றுவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Da Vinci Expensive diamonds

Blogs Tumbling Reels Structure: More Wins, More pleasurable!: casino slots tips Symbols And you may Multipliers Of one’s Da Vinci Diamonds Position Unique Benefits From