14291 பருத்தித்துறையிலிருந்து கற்றிங்கன் வரை: ஒரு புலம்பெயர்ந்தவனின் கதை.

ஜோர்ஜ் டயஸ். லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. பருத்தித்துறையில் பிறந்து ஜேர்மனியில் பதியம் வைக்கப்பட்ட ஒரு முதலாம் தலைமுறை இளைஞனின் வாழ்க்கைப் பாதை இங்கு சுயசரிதையாக விரிந்துள்ளது. ஜோர்ஜ் டயஸ் கடந்து சென்ற கல்லும் முள்ளும் செறிந்த பாதை எவ்வாறு அவரை ஒரு அறிவுஜீவியாக மாற்றி விட்டிருக்கின்றது என்ற வெற்றிக் கதையை வாசகர் இந்நூலில் காணமுடிகின்றது. ஜோர்ஜ் டயஸ் போன்ற பல இளைஞர்களும் யுவதிகளும் இன்று வாழ்வில் உயர்நிலையை எய்தியுள்ளார்கள். புகலிடத் தமிழர்களின் ‘அகதி” என்ற துயர்கவியும் பெயரை இல்லாது செய்து அவர்களை ஆளுமையுள்ள ஒரு சமூகமாக உலகம் வியந்து நோக்க வைத்துள்ளார்கள். புகலிடத்தின் புலம்பல்களுக்கிடையே இத்தகைய வெற்றிக் கனிகளைப் பற்றியும் தாயகத்தில் வெளிப்படுத்தப்படவேண்டிய தேவை இன்றுள்ளது. அதனை இநநூல் ஓரளவு பூர்த்திசெய்துள்ளது. இது ஒரு தனிமனித சாதனையல்ல. தாயகத்தின் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் வீறுகொண்ட எழுச்சியின் மற்றுமொரு பரிமாணம்.

ஏனைய பதிவுகள்

17555 தொலைந்த நாட்கள்.

திருமலை சுந்தா (இயற்பெயர்: சின்னத்துரை சுந்தரலிங்கம்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், A.R.Trading, 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, சித்திரை 2014. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ்). 40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150.,

12438 – வெளி: நான்காவது ஆண்டு மலர் 2004.

த.சேரலாதன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு:மாணவர் அவை, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வதுபதிப்பு, 2004. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி). ix, 117 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.