14297 மண்-நீர்: தேசிய கண்காட்சி-நீரேந்துப் பரப்புகளைப் பாதுகாத்தல்: ஞாபகார்த்த மலர்.

மலர்க் குழு. கொழும்பு: மேல்மட்ட நீர்த்தேக்க பிரதேச முகாமைத்துவ திட்டம், சூழலியல் இயற்கை வளங்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு). viii, 75+91 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீதமிழ் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இச்சிறப்பிதழில் மண்ணால் நிறைவேறும் செயற்பாடுகள் (எம்.பி.திசாநாயக்க), பாதுகாப்பில்லாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்குப் பலிக்கடாவாகும் மலையகத்தின் மண்ணையும் நீரையும் எவ்வாறு பாதுகாப்பது? (பீ.எச்.ஜயவர்த்தன), மண் நீர் வளங்களில் விவசாய நடவடிக்கைகளின் பாதிப்புக்கள் (எச்.பீ. நாயக்ககோராள), இலங்கையின் நீரேந்தும் பரப்புகளும் மண்ணரிப்பும் (நிலுசா சரங்கனி லியனகமகே), மண் சரிவை எதிர்கொள்வதாயின் (கபில தஷநாயக்க), இலங்கை சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் (டி.எம்.கருணாதாச திசாநாயக்க), நீர் நிலைகள் மாசடைதல் (சரத் லால் அமரசிரி), மத்திய மலைநாட்டில் நிலங்களை முறையாகப் பயன்படுத்தாமையால் ஏற்படும் மண்ணரிப்புகள் வன அழிவுகளாகும் (டி.ஏ.சிரானி), மேல் நீரேந்துப் பரப்புகளில் பெயர்ஸ் தோடைச் செய்கை (டி.ஏ.சிரானி), மேல் நீரேந்துப் பரப்புகளில் மண்களில் ஏற்படக்கூடிய இரசாயன மாற்றங்கள் (அனந்த எஸ்.ஜயக்கொடி), மலைநாட்டில் உருளைக்கிழங்குச் செய்கையினால் ஏற்படும் மண்ணரிப்பும் கட்டுப்படுத்தலும் (எச்.ஆர்.ஜே.பீ. எரபதுபிட்டிய), மனித உயிர்களைப் பலிகொள்ளும் பீடை நாசினிகள் (சுமித் ஜயகொடி), ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவம் (ஜே.டீ.எச். விஜேவர்த்தன), மூலிகை வனாந்தரங்களையும் பாதுகாக்கும் பாரம்பரிய முறை (பியல் மாரசிங்க), மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவத் திட்டம் (பியல் மாரசிங்க), மேல் நீரேந்துப் பரப்புகளின் காடுகளைப் பாதுகாத்தல் (சுனில் கமகே) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37018).

ஏனைய பதிவுகள்