14305 சுயதொழில் வழிகாட்டி.

சி.வன்னியகுலம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: திட்டமிடல் பிரதிச் செயலர் அலுவலகம், நிதி திட்டமிடல் அமைச்சு, வடக்குகிழக்கு மாகாண சபை, 1வது பதிப்பு, மே 1992. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், திருக்கோணமலை, அன்பு ஒழுங்கை, உப்புவெளி). (12), 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16.5 சமீ. 1992ம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறும் ஜனாதிபதி இடம்பெயர் சேவையின்போது இந்நூல் வெளியிடப்பட்டது. இதில் சுயதொழில் முயற்சி ஓர் அறிமுகம், சுயதொழிலும் வேலையில்லாத் திண்டாட்டத் தீர்வும், சுயதொழிலும் பொருத்தமான தொழில்நுட்பமும், பொருத்தமான தொழில்நுட்பத்தின் இன்றியமையாமை, சனசவிய நம்பிக்கை நிதியத்தின் சமூகநலத் திட்டங்கள், சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவித் திட்டங்கள், மக்கள் வங்கிக் கடனுதவித் திட்டம், ஹற்றன் நெஷனல் வங்கி, சுயதொழில் திட்டத்தை தெரிவுசெய்தலும் உருவாக்கலும் திட்ட அறிக்கை தயாரித்தலும், சுயதொழில்திட்ட அறிக்கை நிதிக்கூற்று, மாதிரி செயற்திட்ட அறிக்கை, மெழுகுவர்த்தி தயாரித்தல், பாடசாலை வெண்கட்டி தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல், கடதாசிப் பொம்மை தயாரித்தல், கடித உறை தயாரித்தல், அலுவலக பயன்பாட்டுக்கான மரப்பொருட்கள் தயாரித்தல், சீமெந்து புளொக்குகள் (கல்) தயாரித்தல், செங்கல் தயாரித்தல், கண்ணாடி இழைப்பொருட்கள் உற்பத்தி, சூட்கேஸ் தயாரித்தல், பனை ஓலைப்பொருட்கள் தயாரித்தல், பனந்தும்பு தயாரித்தல், தும்புக் கயிறு தயாரித்தல், கயிற்றுத் தும்புச் சுருள் தயாரித்தல், நெசவுத்தொழில், தலையணை உறை தயாரித்தல், புற்பாய் தயாரித்தல், பிரம்புப் பொருட்கள் தயாரித்தல், கைப்பொறி மூலம் தானியம் அரைத்தல், மாவகை பொதி செய்தல், மாவினால் தின்பண்டங்கள் தயாரித்தல், போசாக்கு உணவுப்பொதி தயாரித்தல், இனிப்புகள், ரொபிகள், தயாரித்தல், தக்காளிக் குழம்பு (சோஸ்) தயாரித்தல், யோகட் தயாரித்தல், ஜாம் தயாரித்தல், மார்ஷ்மெலோ தயாரித்தல், நூடில்ஸ் தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், குளிர்பானம் தயாரித்தல், பாணிப்பனாட்டு தயாரித்தல், பதநீரிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட பனங்களி தயாரித்தல், கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல், முயல் வளர்த்தல், தேனீ வளர்த்தல், காளான் வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், காஸ் வெல்டிங் தொழில், ஆர்க் வெல்டிங் தொழில், ஸ்பிரே பெயின்டிங் தொழில், வாகனங்களின் ரயர்களை கையால் மாற்றுதல், துவிச்சக்கரவண்டி பழுதுபார்த்தல், கடிகாரம் மணிக்கூடு பழுதுபார்த்தல், பி.வி.சி. ஈயக்குழாய் பழுது பார்த்தல், பிளாஸ்ரிக் எழுத்துக்கள், பெயர்த்தகடுகள் தயாரித்தல், படச்சட்டம் (பிரேம்) அமைத்தல், புத்தகம் கட்டுதல், புத்தக நிலையம் அமைத்தல் ஆகிய 61 சுயதொழில்களுக்கான வழிகாட்டியாக இந்நூல் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35626).

ஏனைய பதிவுகள்