14306 இலங்கை மத்திய வங்கி: அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் முக்கிய பண்புகள் 2002.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). 61 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ. இவ்வறிக்கையில் முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள், அறிமுகம், தேசிய வருமானமும் பொருளாதார வளர்ச்சியும், முதலீடு மற்றும் சேமிப்புகள், விலைகள் மற்றும் பணவீக்கம், தொழில் நிலை மற்றும் கூலிகள், வேளாண்மை, கைத்தொழில், உட்கட்டமைப்பும் பணிகளும், அரச நிதி, பாதகாப்பு வலை- சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, சென்மதி நிலுவையும் செலாவணி வீதமும், பணமும் வட்டி வீதங்களும், வங்கித் தொழிலும் நிதியும், புள்ளி விபரப் பின்னிணைப்புகள் ஆகிய பிரிவுகளின் கீழ் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23105).

ஏனைய பதிவுகள்