இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு: லேசர் கிராப்பிக் லிமிட்டெட்). (6), 77 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISDN: 955-575-120-X. இவ்வறிக்கையில் பொது நோக்கு, தேசிய உற்பத்தியும் செலவும், பொருளாதார சமூக உட்கட்டமைப்பு, விலைகள் கூலிகள் தொழில் நிலை, வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகள், இறைக்கொள்கையும் அரச நிதியும், நாணயக்கொள்கை, பணம், கொடுகடன் மற்றும் வட்டி வீதங்கள், நிதியியல்துறை அபிவிருத்திகளும் உறுதிப்பாடும், புள்ளி விபரப் பின்னிணைப்புகள் ஆகிய பிரிவுகளின் கீழ் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39561).