A.W.M.ஹன்ஸீர். தெகிவளை: பாத்திமா பப்ளிக்கேஷன்ஸ், 30, பெயர்லைன் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1989. (சென்னை: திரீயெம் பிரின்டர்ஸ், ஆர்மீனியன் வீதி). 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. நிர்வாகச் சட்டத்தின் வரைவிலக்கணமும் செயற்பாடும், நிர்வாகச் சட்டத்தின் தன்மையும் நோக்கமும், நிர்வாகச் சட்டத்தின் வளர்ச்சி, அரசியல் சட்டமும் நிர்வாகச் சட்டமும், சிவில் சேவை அல்லது நிர்வாக சேவை, நிர்வாக அதிகார வர்க்கம், நிர்வாகச் செயல், தற்றுணிபு, நிர்வாக நீதி, நிர்வாக நியாய சபைகள், நியாயாதிக்கம், கையளிவதிகார வழிச்சட்டவாக்கம், கையளிவதிகார வழிச் சட்டவாக்கத்தின் வகைகள், கையளிவதிகார வழிச் சட்டத்திற்கான காரணங்கள், கையளிவதிகார வழிச் சட்டவாக்கத்தைக் கட்டுப்படுத்துதல், துணைவிதிகளின் செல்லுபடியாந் தன்மை, இயற்கை நீதி, பேராணை, அரசாங்கத்திற்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் ஆகிய 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 09550).