14327 இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு: இரண்டாம் பாகம்.

இ.முத்துத்தம்பி. வட்டுக்கோட்டை: இ.முத்துத்தம்பி, பொருளியல் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). viii, 271-567 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 5.95, அளவு: 21×14 சமீ. இரு பாகங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் பாகத்தில் பிரதம அமைச்சர், ஜனாதிபதி, அரச அலுவலர், நீதி பரிபாலனம், மதம்-மொழி-குடியுரிமை, தலத் தாபன ஆட்சி, அரசியற் கட்சிகளும் தன்னலத் தொகுதிகளும் ஆகிய அத்தியாயங்களில் இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு மாணவர்களுக்கு ஏற்றவகையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. அனுபந்தங்களாக, தேர்தல்களிலபாராளுமன்ற உறுப்பினர்கள், வாக்குகள், தலத்தாபன வருமானம்-1968, சுயேச்சையாளர் பற்றிய புள்ளிவிபரங்கள், பெருங்கட்சிகளுக்குக் கிடைத்த சதவீத வாக்குகள் என்பன விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30724).

ஏனைய பதிவுகள்