14338 மக்கள் சேவையில் 3 ஆண்டுகள்.

சோதீ மணிவண்ணன் (இதழாசிரியர்). வவுனியா: வவுனியா நகர சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 2: வெட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை). (6), 76, (24) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ. வவுனியா நகரசபை இயங்கிய ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியான 04.04.1994 முதல் 04.04.1997 வரையிலான நிர்வாகக் காலத்தில் அதன் சமூகப் பணிகள் பற்றிய புகைப்பட ஆவணங்களுடன் கூடிய மக்கள் அறிக்கையாக இம்மலர் வெளிவந்துள்ளது. இம்மலரின் வெளியீட்டுக் குழுவில் வி.எஸ்.எஸ்.செல்வராஜா, சு.விஜயதாஸ், வே.வசந்தகுமார், திருமதி சோதீ மணிவண்ணன், செல்வி சு.ராதிகா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34506).

ஏனைய பதிவுகள்

16250 மலையக சமூக மேம்பாட்டில் ஆங்கில மொழி மற்றும் மூன்றாம் நிலை கல்வியின் முக்கியத்துவம்.

எஸ்.இராஜதுரை. கொழும்பு 8: அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, மங்கள வீதி, மனிங் டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

13904 கல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்.

பூ. சுகந்தன் (மலர் ஆசிரியர்). புத்தளம்: புத்தளம் வலய தமிழ்ப் பாடசாலைகள், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (புத்தளம்: மிலொம் பிரின்டர்ஸ்). ix, 39 பக்கம், விலை: