ம.துஷ்யந்தன் (மலர்த் தொகுப்பாசிரியர்). புன்னாலைக்கட்டுவன்: கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). vi, (4), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. ஆசிச் செய்தி, வாழ்த்துச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இச்சிறப்பு மலரில் கணேச சனசமூக நிலையத் தலைவரின் இதயத்திலிருந்து, கணேச சனசமூக நிலையத்தின் வரலாறு (1946-1996 வரை), கணேச சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் (1996இன் பின்), எமது கிராமத்தின் பொது நிறுவனங்கள், கணேச சனசமூக நிலையமும் நானும்-சில நினைவுக் குறிப்புகள், அது ஒரு பொற்காலம், வித்துவசிரோமணி சி.கணேசையர், சனசமூக நிலையங்களும் முன்பள்ளிகளும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.