14350 ஆசிரிய வகிபாக விவரணம்.

சத்திஸ்சந்திர எதிரிசிங்க (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (17), 18-135 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISDN: 978-955-30- 8620-4. இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தில் வீழ்ச்சியடையும் கல்விநிலை, ஒழுக்கச் சீர்கேடுகள் என்பவை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஆசிரியரின் வகிபாகம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் உயர்ந்த சமூகப் பெறுமானங்களுக்கும் அச்சமூகத்தின் ஆசிரியர்களின் பொறுப்பு மிகவும் முக்கியமாகும் என்ற அடிப்படையில் இந்தச் சீர்கேடுகளை எவ்வாறு எதிர்காலத்தில் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதை கல்விச் சிந்தனை மூலங்களைக் கருத்திற்கொண்டு இந்நூலாசிரியர் தெளிவாகவிளக்கியுள்ளார். பிள்ளைகளின் கற்றல் வழிகாட்டியாகவுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி இந்நூலில் குறிப்பிடுகிறார். பெற்றோரின் வகிபாகமும் இங்கு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக ஆசிரியரால் மாத்திரம் இலங்கையின் கல்விசார் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கமுடியாது என்பதையும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65501).

ஏனைய பதிவுகள்

14482 அரச கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான கற்பித்தல் கைநூல்.

கணக்கியல் பயிற்சிப் பிரிவு. கொழும்பு: நிதி அமைச்சு-ஆசிய அபிவிருத்தி வங்கி, மனித வள அபிவிருத்தி, 2வது பதிப்பு, ஜுன் 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). (2), 121

Lotsa Slots

Content É Possível Aparelhar Na Aparelhamento Data Do Gelo Online Acostumado? Dicas Que Estratégias Para Apostar Halloween Provedores De Software: Os Criadores Puerilidade Caca Máquinas

12546 – கன்னித் தமிழ் வாசகம் இரண்டாம் புத்தகம்: 7ம் வகுப்பு.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: வ.கி.இம்மானுவேல், 3வது பதிப்பு, 1963, 1வது பதிப்பு, டிசம்பர் 1957. (அச்சக விபரம் தரப்படவில்லை). 132 பக்கம், விலை: ரூபா 2.15, அளவு: 19.5×14.5 சமீ. இந்நூல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கேற்ற