14355 மாணவர்களின் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல்.

ப.மு.நவாஸ்தீன், ராஷிப் சிபானி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISDN: 978-955-4676-94-7. இந்நூலில் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் வரைவிலக்கணப்படுத்தல், சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் திறனுள்ள மாணவர்களிடம் காணப்படும் பண்புகள், சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் உத்திகள், சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக ஆசிரியர்களின் வகிபங்கு, சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் தொடர்பான கோட்பாடுகள், சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் மீதான பார்வை ஆகிய ஏழு இயல்களின் வழியாக மாணவர்களின் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலாநிதி ப.மு.நவாஸ்தீன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராவார். புத்தளம் காரைதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றும் குலாம் காதிர் பாத்திமா சிபானி மன்னார் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 124ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்