14361 தமிழ்த் தீபம்-2018.

இதழாசிரியர் குழு. கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: ஓசை டிஜிட்டல், 473, 1/1யு, காலி வீதி, வெள்ளவத்தை). (32), 33-176 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. இலங்கையின் புகழ் வாய்ந்த தமிழ்க் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி விளங்கி வருகின்றது. இக்கல்லூரியின் நாடளாவிய பெருமைக்குக் காரணம், இதன் கல்வி நிலைப்பட்ட செயற்பாடுகளும், மாணவரின் பல்வேறு துறைசார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர முற்படும் முயற்சிகளும் ஆகும். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் முத்தமிழ் விழா, தமிழின் இனிமையையும், ஆற்றலையும், பெருமையையும் தமிழ்க்கலைகளின் சுவையினையும் வெளியுலகுக்கு தெரிவிக்கும் மேலும் ஒரு நிகழ்வாக அமைகின்றது. அதே வேளை மாணவர்களின் கலை வெளிப்பாடுகளையும், அவர்களுக்கு பின்னணியிலிருந்து அவர்களை ஊக்குவிக்கும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களை புலப்படுத்துவதாயும் இவ்விழா அமைகிறது. விழாவையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலர் இதுவாகும். மாணவர்களின் சிறந்த ஆக்கங்களுடன் இது வெளிவந்துள்ளது. இம்மலரின் இதழாசிரியர் குழுவில் கி.கிருஷாந்த், ச.ரதுஷன், பா.ரஜீவன் ஆகிய மாணவர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14090 உலக சைவப் பேரவையின் யாப்பு.

உலக சைவப் பேரவை. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. 1998