14363 மலைத்தென்றல் சிறப்பு மலர்- 2015.

கஜானன் கணேசமூர்த்தி (இதழாசிரியர்). பதுளை: ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). x, 182 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. மாணவர்களின் பல்வேறு கவிதை உள்ளிட்ட ஆக்க இலக்கியப் படைப் பாக்கங்களுடன் பத்தாண்டு நிறைவில் ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம், உலகெங்கும் வியாபித்துள்ள தமிழரின் கலைகளும் கலாசார பண்பாடுகளும், ஈழத்துப் புராதன சமய நெறியில் இந்து சமய வழிபாடு, மருந்து இல்லாமல் மருத்துவம், குமரிக்கண்டம்-லெமூரியா, தஞ்சைப் பெரியகோயில், ஆங்கொர்வாட்- உலகின் பெரிய கோவில், விஞ்ஞானமும் பண்டைய வழக்கங்களும், நியூட்டனின் மூன்றாவது விதி என இன்னோரன்ன சுவையான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. மலைத்தென்றல் மலர்க் குழுவில் க.கஜனன், ச.பைந்தமிழ், அ.கார்த்திகன், ந.வேணுசரண், கா.சுபாங்கன், பா.மகிந்தன், வி.சிந்துஜா, க.மாறன் ஆகியோரபணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61117).

ஏனைய பதிவுகள்