14366 இந்து தீபம்: 1999.

இரா.ரமேஷ்சங்கர் (இதழாசிரியர்), எம்.யோகேந்திரன், எஸ். சுபாஷ் (உதவி ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,ஓகஸ்ட் 1999. (கொழும்பு: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்). (100) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் ஆண்டு மலர் இது. 06.08.1999 அன்று வெளியிடப்பெற்ற இம்மலரில், தமிழ்மொழி வாழ்த்து, ஒளி படைத்த கண்ணியாய்….. (கிருஷ்ணா கலைச்செல்வன், க.கமலாஜினி), திருமுறைகள் தொடரட்டும் (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), திருவாசகத்தில் விஞ்ஞானம் (ஆ.சா.ஞானசம்பந்தன்), கொழும்பு ஸ்ரீ சிவகாமசௌந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் (இந்து வித்யாநிதி), முன்னேற்றங்களும் பிரச்சனைகளும் (சோ.சந்திரசேகரன்), மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் சைவசமய நித்திய விரதங்கள் (ஆறு.திருமுருகன்), இன்றைய காதல்….. (கு.குகப்பிரியா), கலாச்சாரம் என்பது என்ன? (பு.கீதவாணி), மதம் இங்கே மனிதம் எங்கே? (ஏ.இதயவாணி), அறமும் கலையும் வளர்த்த எமது சமயம் (த.மகிழ்நங்கை), திரை இசைப் பாடல்களில் தமிழ் இனிமை மத நம்பிக்கை (சோ.சுபாஷ்), காலத்தின் அருமை (சசிப்பிரபா ஸ்ரீ பத்மாதரன்) ஆகிய கட்டுரைகளும், எம்.ஜே.எம். இர்ஷாத், தி.திவாகரன், அநாமிகன், சி.பரமேஸ், மாதுமை சிவசுப்பிரமணியம், நி.சத்தியசுதன் ஆகியோரின் கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27128).

ஏனைய பதிவுகள்

Best Spend By Cell phone Casinos 2024

Blogs Online casino Spend By Cellular phone Bill Australian continent Learning to make In initial deposit Via Paypal On the Mobile Gambling establishment? But not,