கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).(92) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம், 21.10.1985 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்திய கலைமகள் விழாவின்போது இவ்வாண்டு மலர் வெளியிடப்பட்டது. வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. மன்றக் காப்பாளரின் ஆசிச் செய்தி (த. சங்கரலிங்கம்), வாழ்த்துச் செய்தி (ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள்), பிரதம அதிதியின் ஆசிச் செய்தி (சௌ.தொண்டமான்), ஆசியுரை (சுவாமி பிரேமாத்மானந்தா), பதில் அதிபரின் ஆசிச் செய்தி (சு.பற்குணம்), உப அதிபரின் ஆசிச் செய்தி (திருமதி வி.சுந்தரமூர்த்தி), ஆசிச் செய்தி (திருமதி கே.சுந்தரலிங்கம்), ‘இந்து நாதம்” மலருக்கு ஆசியுரை (தங்கம்மா அப்பாக்குட்டி), இந்து வித்தியா விருத்திச் சங்கத் தலைவரின் ஆசிச் செய்தி (மு.ஊ.தங்கராசா), மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி (சி.சோமநாதன்), பாடசாலை அபிவிருத்திச் சபைச் செயலாளரின் ஆசிச் செய்தி (N.மதுசூதனன்), இந்து மாணவர் மன்றத் தலைவரின் சிந்தனையிலிருந்து (இராமச்சந்திரன் துஷ்யந்தன்), இந்து மாணவர் மன்றச் செயலாளரின் சிந்தனையிலிருந்து (ஜெயந்தன் பாலசுப்பிரமணியம்), இந்து மாணவர் மன்ற செயற்குழு, இந்துக் கல்லூரி மாணவத் தலைவர் குழு, இந்து தர்மம் (சுவாமி ஜீவானந்தா), முருக வழிபாடு (ந.ராஜகணேஷ்), திருநீற்றின் மகிமை (க.பிரதீபன்), மேலான செல்வம் (அ.நரேந்திரன்), மாணவர் வாழ்வில் சமயம் (ஏ.எஸ்.எம்.ஷிஹாம்), இந்து சமயம் ஒரு உலகப் பொதுச் சமயம் (ச.அன்பழகன்), இந்து மதம் காட்டும் அன்பு வாழ்க்கை (யோ.ஜெகன்), சைவசித்தாந்த கோட்பாடுகளும் நாமும் (க.இராஜராஜேஸ்வரன்), சமய வாழ்வும் ஒழுக்கமும் (கந்தசாமி கிருபாகரன்), உள்ளத்தால் உவந்தளிக்கும் நன்றிகள் ஆகிய விடயதானங்கள் இம்மவரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34632).
Super Pachinko Plus Casino Game
Content What To Expect From Our Approved Slots Sites: Book Of Anime giros livres de slot “jogador Aleatório” Ready To Play Kerching For Atual? Which