14373 சங்கநாதம் 1976-1977.

சி.சிவானந்தராஜா (இதழாசிரியர்). கொழும்பு 6: வணிக கலை மன்றம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 1977. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (4), 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. தமிழ் பேசும் மாணவர்களுக்குத் தமிழ் மூலம் விஞ்ஞானம், வணிகம், கலை முதலிய துறைகளுக்கான பாடங்களைக் கற்பித்து அவர்களுடைய கல்வி அபிவிருத்திக்கு உதவுதல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பணிகளுள் ஒன்றாகும். இவற்றுள் வணிகமும் கலையும் 1970களில் ஆரம்பிக்கப்பட்டவை. ஆயினும் அவை தமிழ்ச் சங்கத்தில் துரித வளர்ச்சியினை கண்டடைந்துள்ளன. ஆசிரியர்களும் மாணவர்களும் துறைசார்ந்த பயிற்சிகளில் மாத்திரமன்றித் தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றிலும் மிக்க ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்துள்ளனர். இவ்வகையில் வணிக மாணவ மன்றத்தினர் 1977 மார்ச் மாதம் 18ஆம் நாளன்று கலைவிழாவொன்றினை தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்தனர். இவ்விழாவையொட்டி வெளியிடப்பட்டசிறப்பு மலரே இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11080).

ஏனைய பதிவுகள்