லக்சனா தேவகஜானன் (மலர் ஆசிரியர்). ஊர்காவற்றுறை: யாஃகரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம், கரம்பொன் மேற்கு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ்). 95 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. ஸ்ரீமத் மஹாதேவா சுவாமிகள் 1917இல் ஸ்தாபித்த மேற்படி கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழாவையொட்டி இச்சிறப்பு மலர் வெளிவந்துள்ளது. இம்மலரில் பல்வேறு சமய, சமூகப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகள், ஆசிச் செய்திகள் போன்றவற்றைத் தொடர்ந்து பாடசாலையை நிர்வகித்த அதிபர்கள், அதிபர் பார்வையில், யாஃ கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய வரலாறு ஆகிய பாடசாலை பற்றிய தகவல்களுடன், தீவுகளின் அபிவிருத்திக்கான திறமுறைகள், மகாதேவாவின் கல்வியியல் அறம், கிராமப்புற பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவதால் கல்வி பாதிப்படைதலும் அதற்கான தீர்வுகளும், காலநிலை மாற்றமும் பயிராக்கவியல் முறைகளும், தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே, விஞ்ஞான வளர்ச்சியும் மனித வாழ்க்கை முறையும், இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம், தொழில்நுட்ப வளர்ச்சி, காய் கனி கீரை தானிய மருத்துவ குணங்கள், விடைபெறுகின்றன பட்டாம்பூச்சிகள், நனறியுள்ளவனாய் வாழ்க, அறிவியல் கருவிகள், இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், பார் எங்கும் பறக்கும் பட்டாம்பூச்சி, ஒழுக்கக் கல்வி, எனது பள்ளி வாழ்க்கையில், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான், எங்கள் பாடசாலை, ஆரம்பக் கல்வி எனும் அத்திவாரம், தகவல் பெட்டகம், ஊ.று.று.கன்னங்கராவும் பொது அறிவும், நில் மழையே நில், யு.P.து. அப்துல் கலாம், செல்லப்பிராணி, விடுகதை, ஆசிரியர் பாடல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. மலர்க்குழுவில் தி.செல்வகஜானன், ஜெ.ஜெயபிரியந்தன், கா.கார்த்திகா, த.டிஷாந்தி, திருமதி த.புஷ்பதீபன், திருமதி த.அன்ட்று கிரேஷியன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.