14381 கல்வி பொதுத்தராதர பத்திரம் (உயர் தரம்) ஆண்டு 12-13: பொறியியல் தொழினுட்பவியல் பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொழினுட்பக் கல்வித் துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2016. (மஹரகம: தேசிய கல்வி நிறுவக அச்சகப் பிரிவு). vii, 75 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 19.5×29.5 சமீ. 2017ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் பொறியியல் தொழினுட்பவியல் பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. தொழினுட்பவியல் துறையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானரீதியான கோட்பாடுகளைப் பயன்படுத்துதல், தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பாக ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்கத்தை ஏற்படுத்தல், நாளாந்த வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை கணிதக் கோட்பாடுகளை விருத்தி செய்தல், விஞ்ஞானரீதியான கோட்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை தொழினுட்ப, சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், தேசிய மற்றும் பூகோள சூழல் பிரச்சினைகளை அவதானித்து நிலையான வளங்களை பயன்படுத்தும் முறை பற்றிய அறிவைப் பெறல் ஆகிய ஐந்து விடயங்களை இப்பாடநோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65682).

ஏனைய பதிவுகள்

12601 – G.C.E. உயர்தரம் 10: 1998-2007 பரீட்சை வினாக்களும் விடைகளும்: இரசாயனவியல் 1&2.

அஸ்ரன் பதிப்பக ஆசிரியர் குழு. கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ்). (320) பக்கம், விலை: ரூபா

12418 – தமிழ் ஆரம் 2016.

சுகிர்தா சிவசுப்பிரமணியம், டிலக்ஷிகா அரவிந்தன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 681, காங்கேசன்துறை வீதி). xvii, 90 பக்கம், அட்டவணைகள்,

12562 – தமிழ் மலர் நான்காம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1970, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (14), 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×17