14382 கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் (உயர்தரம்) ஆண்டு 12-13: வரலாறு பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: NIE Press). x, 56 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 20×29.5 சமீ. 2017ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வரலாறு பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளி வந்துள்ளது. அறிமுகம், உள்ளடக்கம், தேசிய பொது இலக்குகள், அடிப்படைத் தேர்ச்சிகள், பாட இலக்குகள், தேசிய பொது இலக்குகளுக்கும் பாட இலக்குகளுக்குமான தொடர்பு, பாடசாலை தவணைக்கான திட்டம் தயாரித்தல், பாடத்திட்டம், பாடசாலைக் கொள்கையும் வேலைத்திட்டங்களும், கணிப்பீடும் மதிப்பீடும், பாடத்திட்டத் தயாரிப்புக் குழு ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65685).

ஏனைய பதிவுகள்

14689 கள்ளக்கணக்கு.

ஆசி.கந்தராஜா. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 145.00, அளவு: 21×14 சமீ., ISBN:

14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14424 இலங்கை மட்டக்களப்பு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மதிப்பீடு.

வே.அந்தனிஜான் அழகரசன். சென்னை 600015: தவத்திரு வே.அந்தனிஜான் அழகரசன், சின்னமலை ஆலயம், சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1976. (சென்னை 600005: வைரம் அச்சகம்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 2.25,